உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுபம் இலவச பயிற்சி மைய விழா

சுபம் இலவச பயிற்சி மைய விழா

பரமக்குடி : பரமக்குடி அருகே சத்திரக்குடி சுபம் இலவச வேலை பயிற்சி மையம் சார்பில் நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா, பயிற்சி ஆசிரியர்களுக்கு நன்றி மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விழா நடந்தது.முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். சத்திரக்குடி ரங்கசாமி, காமன்கோட்டை மாரி, அரசு வக்கீல் சஞ்சய்காந்தி, அ.தி.மு., ஒன்றிய செயலாளர் லோகிதாசன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளரான சுபம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நிறுவனர் பாலு வரவேற்றார். பயிற்சி நிர்வாகி செல்வேந்திரன், சென்னை பால் கருணாகரன், பிராங்க்ளின் ஜோன்ஸ், வக்கீல் சரவணன், பேராசிரியர் ஆண்டவர், திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி, வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன் வாழ்த்தி பேசினர்.அப்போது சுபம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் படித்து பணிக்குச் சென்ற அனைவரையும் வாழ்த்தினர். தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்தார். வக்கீல் கோபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ