உள்ளூர் செய்திகள்

கோடை மழை

முதுகுளத்துார்: முதுகுளத்துார், கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் காலை 11:00 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. காலை 11:00 மணிக்கு மேல் முதுகுளத்துார், பேரையூர், காக்கூர், குமாரக்குறிச்சி உட்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. ஒரு சில பகுதிகளில் பருத்தி விவசாயம் செய்து வருவதால் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி