மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
1 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
1 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
1 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பணி மாறுதல் கலந்தாய்வு அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம்-மதுரை ரோட்டில் உள்ள ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஓருங்கிணைப்பாளர் சிவபாலன் தலைமை வகித்தார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முனியசாமி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைதலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில் கடந்த காலங்களில் ஒன்றியம், மாவட்டத்திற்குள் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டது.தற்போது இம்முறையை மாற்றி அரசு ஆணை 243ல் மாநில அளவில் சீனியார்ட்டி அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவதால் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். தகுதி இருந்தாலும் இடமாறுதாலுக்கு பல லட்சம் ரூபாய் கப்பம் கட்டும் நிலை உள்ளது. எனவே 242 ஆணையை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோஷமிட்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago