உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் மென்னந்தி நாகாச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட குசவ கருங்குளம் கிராமத்தில் கோதண்டராமர், அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று காலை கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். கோதண்டராமர், அய்யனார் மற்றும் காளியம்மன், கருப்பணசாமி, முனியப்பசாமி உள்ளிட்ட பரிவாரங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது, சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனி குமார், ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், பரமக்குடி ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ