மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
4 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
4 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
4 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
4 hour(s) ago
கடலாடி: ராமநாதபுரம் மாவட்ட பூஜாரிகள் நலச்சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் கடலாடி அருகே சமத்துவபுரத்தில் உள்ள மகாலில் நடந்தது.சங்கத்தின் தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சுந்தரம், மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சங்க மாநிலத் தலைவர் வாசு பேசியதாவது:தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் உள்ள பூஜாரிகள் பணி பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். துறை ரீதியான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயிலில் பணியாற்றும் பூஜாரிகளுக்கு கூட அறநிலையத்துறை மூலம் மாதம் ரூ.4000 ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் பூஜாரிகளின் நிலைமை மோசமாக உள்ளது. சரியான சட்ட திட்டங்கள் இல்லாததால் 60 வயதிற்கும் மேற்பட்ட பூஜாரிகள் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே பூஜாரிகள் எளிமையான முறையில் ஓய்வூதியம் பெற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூஜாரிகள் நலவாரிய நலத்திட்டங்கள் வழங்கப்படாமல் வாரியத்தில் இணைந்த பூஜாரிகளுக்கு அவர்கள் இறந்த பின் இறப்பு நிதி வழங்கப்படாமல் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அலுவல் சாரா உறுப்பினர்களை அரசு நியமனம் செய்யவில்லை. எனவே திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago