உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அச்சங்குடி கிராமப் பெண்ணிடம் வீடியோ காலில் பேசிய முதல்வர்

அச்சங்குடி கிராமப் பெண்ணிடம் வீடியோ காலில் பேசிய முதல்வர்

ராமநாதபுரம்: முதல்வர் ஸ்டாலின் நேற்று லாந்தை ஊராட்சி அச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிடம் அலைபேசியில் வீடியோ காலில் பேசினார்.''நீங்கள் நலமா” என்ற திட்டத்தில் பயன்பெறும் மக்களிடம் வீடியோ கால் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடர்பு கொண்டு மக்களின் கருத்துக்ளை கேட்டறிந்தார். சங்கீதாவிடம் உங்களது மகள் கீர்த்திகாஸ்ரீ காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறாரா எனக் கேட்டார்.திடீரென முதல்வர் பேசியதால் மகிழ்ச்சி அடைந்த சங்கீதா நானும் எனது கணவரும் தினக்கூலி வேலைக்கு செல்கிறோம். குழந்தையை பராமரிக்க முடியாமல் இருந்து வந்த நிலையில் காலை உணவு திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது என பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை