மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் அரசு பொதுத்துறை துணைச் செயலராக மாற்றப்பட்டு உள்ளார்.அவருக்கு பதிலாக நகராட்சிகளின் நிர்வாக இணை கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மக்களுக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் அவரது கைப்பட தமிழில் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'ராமநாதபுரம் பொதுமக்கள், அனைத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கலெக்டராக ஒராண்டு இரண்டு மாதங்கள் பணி புரிந்துள்ளேன்.'இக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், அனைத்து துறை அலுவலர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.ராமநாதபுரம் கலெக்டரின் அதிகாரப்பூர்வ முகநுாலில் இதை வெளிட்டுள்ளார். இக்கடிதம் தற்போது பரவி வருகிறது.இதை வரவேற்று அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago