மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
1 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
1 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
1 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
1 hour(s) ago
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் டவுன் பஸ்களில் படிக்கட்டு பயணம் தொடர்கிறது. பல முறை விபத்துக்களில் உயிர்ப்பலி ஏற்பட்டாலும் படிக்கட்டுகளில் தொங்கி செல்பவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. எப்போது தான் திருந்துவார்களோ.ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இருந்து 9-பி வழித்தடம் டவுன் பஸ் சத்திரக்குடி, அரியக்குடி, முத்துசெல்லாபுரம், பாண்டிக்கண்மாய் வரை இயக்கப்படுகிறது. பாண்டிக்கண்மாய் செல்லும் இந்த பஸ்சில் மாலை 5:15 மணிக்கு இந்த படிக்கட்டு பயணம் செல்கின்றனர். பெரும்பாலும் பள்ளி, கல்லுாரிகள் முடிந்து மாணவர்கள் தங்களது கிராமத்திற்கு செல்லும் நேரத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். இந்த நேரங்களில் தற்போது புதியதாக வந்துள்ள தானியங்கி கதவுகள் உள்ள பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகத்தினர் இயக்க வேண்டும்.கதவுகளை மூடாமல் பஸ்களை இயக்க கூடாது என டிரைவருக்கு அறிவுறுத்த வேண்டும். இதுபோன்ற படிக்கட்டு பயணங்களால் உயிர்கள் பலியாவது தெரிந்தும் மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தொடர்கின்றனர். மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தினமும் வீடு வந்து சேரும் வரை பெற்றோர் தவிக்கின்றனர்.அரசு போக்குவரத்துக் கழகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து படிக்கட்டு பயணத்தை தடுக்க வேண்டும்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago