மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
பரமக்குடி:-ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே காந்தி நகர் செக் போஸ்ட் பகுதியில், மதுவிலக்கு போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டூ -வீலரில் வந்த இருவர் ஒரு பேக் மற்றும் கட்டைப்பையை சந்தேகத்திற்கிடமாக வைத்திருந்தனர்.அவற்றை சோதனை செய்த போது, 52 லட்சத்து, 92,200 ரூபாய் இருந்தது. பணத்தை வைத்திருந்த சிவகங்கை மாவட்டம், அரணையூர் பிரபாகரன், 37, வளையனேந்தல் கவிதாஸ், 30, ஆகிய இருவரையும் கைது செய்து எமனேஸ்வரம் போலீசில் ஒப்படைத்து விசாரித்தனர்.இளையான்குடி புதுாரைச் சேர்ந்த பன்னீர் தங்களுக்கு பணத்தை கொடுத்ததாக அளித்த தகவலின்படி, அவரும் கைது செய்யப்பட்டார். எஸ்.பி., சந்தீஷ் கூறியதாவது:நேற்று காலை, 7:45 மணிக்கு மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது ஹவாலா பணம், 52.92 லட்சம் ரூபாய் சிக்கியது. கைதான இருவர் தகவலின்படி, பன்னீர் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து இரு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த தகவல்களை முற்றிலும் நீக்கியுள்ளார். தொடர்ந்து டேட்டாக்களை எடுத்து நெட்வொர்க் குறித்து விசாரிக்கப்படும். மேலும், இவருக்கு சென்னையில் இருந்து பணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை இதுபோன்று பணம் வரும் நிலையில், மொபைல் போன் வாட்ஸாப் தகவல் அடிப்படையில் உரியவர்களுக்கு ஒப்படைத்துள்ளனர். தற்போது பிடிபட்ட பணம் குறித்து வருமான வரி அதிகாரிகள், போலீசார் இணைந்து விசாரணை மேற்கொள்வர். வரும் நாட்களில் மேலும் தகவல் தெரிய வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago