உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செலவுக்கு பணம் தராததால் காருக்கு தீ வைத்தவர் கைது

செலவுக்கு பணம் தராததால் காருக்கு தீ வைத்தவர் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கழுகூரணி முத்தமிழ்நகர் பகுதியில் காருக்கு தீவைத்தவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் கழுகூரணி முத்தமிழ் நகர் ஸ்ரீகல்கி பகவான் தெருவை சேர்ந்தவர் இளமுருகன் 54. இவர் வீட்டின் முன் தனது காரை நிறுத்தியிருந்தார். அருகில் உள்ள வீட்டில் உறவினர் ராஜேந்திரன் மகன் கண்ணன் 30, குடியிருந்து வருகிறார்.கண்ணன் இளமுருகனிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். இளமுருகன் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், ராஜேந்திரன் காருக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடினார். இளமுருகன் புகாரில் கேணிக்கரை போலீசார் காருக்கு தீவைத்த கண்ணனை கைது செய்தனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி