உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  பழைய வாசல் இரவு நேரங்களில் மூடல் 

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  பழைய வாசல் இரவு நேரங்களில் மூடல் 

ராமநாதபுரம், : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பழைய வாசல் கதவு மூடப்பட்டு புதிய வாசலில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மனநலப்பிரிவு, தீக்காய சிகிச்சைப் பிரிவு என பல்வேறு பிரிவுகள் இயங்குகின்றன.தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.இதில் புதிய கட்டடம் கட்டுமான பணியில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மேற்குப் பகுதியில் வாசல் அமைக்கப்பட்டுள்ளது.இதில் வாகனங்கள் உள்ளே செல்வதற்கும், வெளியில் செல்வதற்கும் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக பழைய கட்டடத்தில் இருந்த வாசல் கதவுகள் பாதுகாப்பு காரணமாக தினமும் இரவு 7:00 முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை பழைய கட்டட கேட் வாசல் மூடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நுழைவு வாயில் கேட் மூடப்பட்டுள்ளது, என்கின்றனர்.இதுவரை 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், நோயாளிகளின் அலைபேசிகள், சிறு, சிறு நகைகள் என நிறைய திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.இதனை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பழைய வாசல் கேட்டு மூடப்பட்டு வருகிறது.பாதுகாப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை