கோழி கூண்டில் புகுந்த பாம்பு
திருவாடானை: திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது வீட்டின்முன்புள்ள கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் நாகபாம்பு புகுந்தது. தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். இதே போல் தினையத்துார் முனியசாமி வீட்டில் புகுந்த பாம்பையும் பிடித்தனர்.