உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலக்கிடாரம் ஊராட்சியில் கால்நடை டாக்டர் இல்லை; விவசாயிகள் கவலை

மேலக்கிடாரம் ஊராட்சியில் கால்நடை டாக்டர் இல்லை; விவசாயிகள் கவலை

சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் ஊராட்சியில் கால்நடை மருந்தகம் திருவரங்கை கிராமத்தில் உள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கால்நடை டாக்டர் இல்லாததால் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க இயலாமல் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலக்கிடாரத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:மேலக்கிடாரம் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வீடுகளில் ஆடு, மாடு, கோழி வளர்க்கின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு வருமானம் தரும் நிலையில் கால்நடை டாக்டர் இல்லாத நிலை உள்ளது.இதனால் பெரும்பாலானோர் தனியார் டாக்டர்களிடம் சென்று அதிக தொகை செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கால்நடை மருத்துவத்துறை அதிகாரிகள் இங்கு டாக்டர் நியமிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ