உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை - அழகமடை ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை - அழகமடை ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை: திருவாடானையிலிருந்து அழகமடைக்கு செல்லும் தார்ரோடு போக்குவரத்திற்கு லயக்கற்ற வகையில் குண்டும், குழியுமாகி உள்ளதால் இரு கிராமமக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.இது குறித்து செங்கமடை மக்கள் கூறுகையில், திருவாடானையிலிருந்து 2 கி.மீ. துாரத்தில் செங்கமடையும், அங்கிருந்து ஒரு கி.மீ. துாரத்தில் அழகமடையும் உள்ளது. 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட இந்த இரு கிராமங்களுக்கு ரோடு வசதி மோசமாக உள்ளது. மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கியிருப்பதால் டூவீலர்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.இப்பகுதி மக்கள் திருவாடானையில் பொருட்கள் வாங்கி தலைசுமையாக நடந்து செல்வார்கள். ரோடு சேதமடைந்திருப்பதால் பெண்கள் சிரமம் அடைந்துள்ளனர். ரோட்டை சீரமைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. புதிதாக தார்ரோடு அமைக்க கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி