உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் தி.மு.க., பிரசாரம் நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி

ராமேஸ்வரத்தில் தி.மு.க., பிரசாரம் நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் தி.மு.க ., கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து நடந்த பிரசாரத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர்.நேற்று ராமேஸ்வரத்தில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஓட்டு சேகரித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா உள்ளிட்ட தி.மு.க.,வினர் காலை 10:00 மணிக்கு பிரசாரத்தை துவக்கினர். ராமேஸ்வரம் சந்தனமாரியம்மன் கோயில் எதிரே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமானோரை தி.மு.க.,வினர் அழைத்து வந்தனர்.திறந்த ஜீப்பில் ஓட்டு கேட்டு பேசியதால் தனுஷ்கோடி தேசிய சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து முடங்கியதால் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் தனுஷ்கோடி செல்ல முடியாமல் வரிசையில் நின்றன. போக்குவரத்து நெரிசலில் மக்கள், சுற்றுலா பயணிகள் சிக்கி சுட்டெரிக்கும் வெயிலில் தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை