உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாரச்சந்தை நாட்களில் மின்தடை ஏற்படுவதால் வணிகர்கள் பாதிப்பு

வாரச்சந்தை நாட்களில் மின்தடை ஏற்படுவதால் வணிகர்கள் பாதிப்பு

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் வாரச்சந்தை நாட்களின்போது மாதாந்திர மின்தடை ஏற்படுவதால் வணிகர்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளார்.கமுதி துணை மின்நிலையத்திலிருந்து முதுகுளத்துார், அபிராமம், கமுதி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்கிறது.நாளை (ஜூன் 13ல்) வியாழக்கிழமை மாதாந்திர பணி என மின்தடை தெரிவித்துள்ளனர். முதுகுளத்துாரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. சுற்றுவட்டார 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.வணிகர் மூவேந்தரன் கூறியதாவது, வாரச்சந்தை நாட்களின் போது மின்தடை ஏற்படுவதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். இனிவரும் நாட்களில் பராமரிப்பு பணிகள் வாரச்சந்தை நாட்களில் நடைபெறாமல் இருக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை