| ADDED : ஏப் 10, 2024 05:58 AM
ராமநாதபுரம் : ஏப்.19ல் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம்கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் தேர்தல் நடத்தும்உதவி அலுவலர்கள், அலுவலர்களுக்குமின்னணு ஓட்டுப்பதிவுஇயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்துகூறியதாவது:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில்சின்னங்கள் பொருத்துவதற்கான பயிற்சியை உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு பெல்நிறுவனப் பொறியாளர்கள் அளிக்கின்றனர்.அலுவலர்கள் கவனமாக தெரிந்து கொண்டு மின்னணுஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேடு இயந்திரம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நன்றாகபொருத்த வேண்டும். அவை செயல்படும் வகையில் அதன் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.சட்டசபை தொகுதி வாரியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னம் பொருத்தப்பட்டு எடுத்துச் செல்லும் வகையில் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்கள் நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். பயிற்சியில் ஏற்படும் சந்தேகங்களை பெல்நிறுவன பொறியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரமக்குடி (தனி) அபிலாஷா கவுர், திருவாடனை மாரிச்செல்வி, முதுகுளத்துார் மாரிமுத்து, ராமநாதபுரம் ராஜமனோகரன், அறந்தாங்கிசிவக்குமார், திருச்சுழி ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள்பங்கேற்றனர்.