மாணவர்களுக்கு காலநிலை குறித்த பயிற்சி
தேவிபட்டினம் : தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் சுற்றுச்சூழல் கல்வித் திட்ட பயிற்சி முகாம் நடந்தது.தேசிய பசுமை படை மாணவவர்களால் பள்ளியில் பல்லுயிர் பரவல் பதிவேடு தயாரிக்கும் பணி நடந்தது. துவக்க நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் தீனதயாளன், தாளாளர் சுவாமி ருத்ரானந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பசுமை படை மாணவியர்கள் சுந்தரமுடையான் மாதிரி தோட்டக்கலை பண்ணை, கடலோரப் பகுதிகளில் பல்லுயிர் பாதுகாப்பு குறித்தும் தேவிபட்டினம் கண்ணா முனை ஆகிய இடங்களுக்கு சென்றனர். நிகழ்ச்சியில் கிரிஷி பாரத் கேந்திரா அமைப்புச் செயலாளர் செல்வராஜ், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர்கள் பெர்னாட்டிக், உமையாள் பங்கேற்றனர்.