உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 2 லட்சம் இஞ்சி பறிமுதல்: கடத்தல்காரர்கள் எஸ்கேப்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 2 லட்சம் இஞ்சி பறிமுதல்: கடத்தல்காரர்கள் எஸ்கேப்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்புள்ள இஞ்சியை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமல் கோட்டை விட்டனர்.மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் சுங்கத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் கடத்தல்காரர்கள் கொண்டு வந்த 60 மூடை பார்சல்களை கடற்கரையில் பதுக்கி வைத்தனர். இதனை சுங்கத்துறையினர் கைப்பற்றி சோதனையிட்டதில் 2 டன் இஞ்சி இருந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம். இதனை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்த கடத்தல்காரர்கள் சுங்கத்துறையை கண்டதும் தப்பி ஓடினர்.இவர்களை பிடிக்க முடியாமல் சுங்கத்துறையும் கோட்டை விட்டது.இலங்கையில் இஞ்சி, மஞ்சள் விளைச்சல் குறைவு என்பதால் அங்கு மவுசு அதிகம். இதனை ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் இருந்து கள்ளத்தனமாக படகில் அதிகம் கடத்தி கடத்தல்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை