உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தார்ப்பாய் மூடாத லாரிகளால் வாகன ஓட்டிகள் சிரமம்

தார்ப்பாய் மூடாத லாரிகளால் வாகன ஓட்டிகள் சிரமம்

கமுதி: கமுதி, முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதியில் லாரி தார்ப்பாயால் மூடப்படாமல் வருவதால் துாசி அதிகம் பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.விருதுநகர், அருப்புக்கோட்டை, கமுதி உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எம்.சாண்ட், பி.சாண்ட், கிராவல் மணல் லாரிகளில் தினந்தோறும் கமுதி, முதுகுளத்துார், கடலாடி பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். கட்டுமானம், அரசு கட்டட வேலைக்கு எம்.சாண்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது.இந்நிலையில் லாரிகளில் தார்ப்பாயால் மூடப்படாமல் கொண்டு வருகின்றனர். இதனால் துாசி அதிகம் பறப்பதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஒருசில நேரங்களில் டூவீலரில் விபத்து ஏற்படுகிறது. லாரிகளில் இருந்து ஜல்லிகற்கள் சிதறி வாகனங்கள் மீது விழுகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ