மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் பள்ளி செயலருக்கு 4 நாள் காவல்
23-Aug-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் வழிப்பறியில் ஈடுப்பட்ட மாரீஸ்வரன் 23, ஹரிகரன் 19, ஆகியோர் நேற்று ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.உச்சிபுளி அருகே குத்துக்கல் வலசை முத்துசரணவன் மனைவி ரேணுகாபிரியா 25. ஆக.25ல் அவரது உறவினர் ஒருவருடன் டூவீலரில் சென்றார். அப்போது நாரையூருணி விலக்கில் டூவீலரில் வந்த 3 பேர் இடைமறித்து கத்தியைக் காட்டி டூவீலர் சாவியை பறித்தும், ரேணுகா பிரியாவிடம் 3 பவுன் செயின், அலைபேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.உச்சிபுளி போலீசார் விசாரணையில் ஆக்கிடாவலசையைச் சேர்ந்த ரஞ்சித் 23, கைது செய்யப்பட்டார். அவரது தகவலின் பேரில் உச்சிபுளி அருகே நாகாச்சியைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் மாரீஸ்வரன் 23, கீழநாகாச்சி மனோகரன் மகன் ஹரிஹரன் 19, ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரும் ராமநாதபுரம் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களைசெப்.23 வரை சிறையில் அடைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.
23-Aug-2024