உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுவரில் கார் மோதி உ.பி., தாய், மகன் பலி

சுவரில் கார் மோதி உ.பி., தாய், மகன் பலி

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கால்வாய் பாலம்தடுப்பு சுவரில் கார் மோதியதில் உ.பி., மாநிலத்தை சேர்ந்த தாய், மகன் பலியாகினர்.உத்திரபிரதேச மாநிலம் குஷிநகரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 5 பேர் காரில் ஆன்மிக சுற்றுலா புறப்பட்டனர்.நேற்று மதுரையில் இருந்து ராமநாதபுரம் இரு வழிச்சாலையில காரில் சென்று கொண்டிருந்தனர். பரமக்குடி அருகேதபால்சாவடியில் மதியம் 12:35 மணிக்கு கட்டுபாட்டை இழந்த கார் கால்வாய் பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் காரை ஓட்டிய உ.பி.,யைச் சேர்ந்த மனோஜ்குப்தா 35, அவரது தாயார் செதிதேவி 60, ஆகியோர் சம்பவஇடத்திலேயே பலியாகினர். உடன் பயணித்த அவர்களது உறவினர்கள் சத்தியேந்தர் 36, துருவ்குப்தா 65, புல்காரி 60, ஆகியோர் படுகாயமுற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சத்திரக்குடி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ