உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தெஞ்சியேந்தல் மயானத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தெஞ்சியேந்தல் மயானத்தை சீரமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் : பரமக்குடி தாலுகா தெஞ்சியேந்தல் கிராமத்தில் பராமரிப்பின்றி உள்ள பொது மயானத்தை சீரமைக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. தெஞ்சியேந்தல் கணேசன் கூறியதாவது: வைரவனேந்தல் ஊராட்சி தெஞ்சியேந்தல் கிராமத்தில் 200 வீடுகள் உள்ளன. ஊர் பொது மயானத்திற்கு செல்லும் ரோடுகற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. மயானத்தில் உள்ள எரியூட்டும் தகன மேடை கூரை சேதமடைந்துள்ளது.சுற்றிலும்சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இறந்தவர் உடலைபுதைக்க இடமில்லாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவேராமநாதபுரம் வரவுள்ள சட்டசபை மனுக்கள் குழு தெஞ்சியேந்தல் மயானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை