மேலும் செய்திகள்
கரும்புகையை கக்கியபடி இயக்கப்படும் அரசு பஸ்கள்
18-Feb-2025
ஆர்.எஸ்.மங்கலம்: திருவாடானையில் இருந்து திருத்தேர்வளை வழியாக இயக்கப்பட்டடவுன் பஸ் சில மாதங்களாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர்.திருவாடானையில் இருந்து திருத்தேர்வளை, மேலக்கோட்டை ஆதிதிராவிடர் காலனி, கப்பகுடி வழியாக ஆனந்துாருக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வழித்தடத்தில் தாழ்வாக உள்ள மரக்கிளைகளால் பஸ் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக திருவாடானையில் இருந்து மாற்று வழித்தடத்தில் ஆனந்துாருக்கு பஸ் இயக்கப்படுகிறது.இதனால் திருத்தேர்வளை, மேலக்கோட்டை, ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வழித்தடத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றி மீண்டும் திருத்தேர்வளை, கப்பகுடி வழித்தடத்தில் பாஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.--
18-Feb-2025