உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிழக்கு கடற்கரை சாலையோரம் முள்செடி அகற்ற வலியுறுத்தல்

கிழக்கு கடற்கரை சாலையோரம் முள்செடி அகற்ற வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள சீமைகருவேல மரங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.கிழக்கு கடற்கரை சாலை தேவிபட்டினம், சம்பை, திருப்பாலைக்குடி, உப்பூர், சேந்தனேந்தல், புதுக்காடு, ஏ.மணக்குடி, புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன.எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக ரோட்டோரங்களில் செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்சில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுகின்றனர்.அதிக வாகன போக்குவரத்து உள்ள பகுதியாக உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ரோட்டோரத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை