உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வன்னிக்குடி - வெள்ளா புதிய தார் ரோடு 6 மாதத்தில் சேதம்

வன்னிக்குடி - வெள்ளா புதிய தார் ரோடு 6 மாதத்தில் சேதம்

உத்தரகோசமங்கை,- உத்தரகோசமங்கை அருகே வன்னிக்குடியிலிருந்து வெள்ளா செல்லும் ரோடு அமைக்கப்பட்டு ஆறு மாதங்களில் சேதமடைந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.வன்னிக்குடி- வெள்ளா கிராமத்திற்கு 3 கி.மீ.,க்கு ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய தார் ரோடு அமைக்கப்பட்டது. அமைத்த சில மாதங்களிலேயே ரோடு தரமற்றதாக இருந்ததால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வெளியே தெரிகிறது. இதனால் டூவீலரில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.முறையாக ரோடு அமைக்கப்படாததால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. தார் ரோட்டின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து ஏற்படுகிறது.எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் சேதமடைந்த சாலையை மீண்டும் சீரமைக்கவும், விபத்துக்கு வழி ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி