மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
13 hour(s) ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில், கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், பூஜாரிகளுக்கு கோவில் வழிபாட்டு பயிற்சி முகாம் ஜூன் 23ல் துவங்கியது. தொடர்ந்து 15 நாள்கள் நடந்த முகாமில், தமிழகத்தில் பல பகுதியை சேர்ந்த 93 பூஜாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு காயத்ரி மந்திரம், அர்ச்சனை மந்திரம், தியான ஸ்லோகம், அபிஷேக முறைகள், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி ஆகியவை தமிழ் மொழியில் பயிற்சி அளித்தனர்.நேற்று நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவிற்கு கிராம கோவில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் எஸ்.வேதாந்தம் தலைமை வகித்தார். காலையில் தத்தாத்ரேயர் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க 40 பூஜாரிகள் பூணுால் அணிந்தனர். பின் பூஜாரிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கினர்.இதில் கோபிசெட்டிபாளையம் சிவாக்கர தேசிக மகாசுவாமிகள், தமிழக வி.எச்.பி., இணை பொதுச்செயலர் ராமசுப்பு, ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன், கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், ராமேஸ்வரம் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் விஜயகுமார் பங்கேற்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago