உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோடு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

ரோடு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

கமுதி : கமுதி அருகே கே.நெடுங்குளத்தில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ரோட்டில் சீமைக்கருவேல மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கமுதி அருகே கே.நெடுங்குளம் கிராமம் வழியாக திருச்சிலுவையாபுரம், உடையகுளம், நல்லாங்குளம், புதுப்பட்டி, உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000 குடும்பங்கள் வசிக்கின்றனர். கே.நெடுங்குளம் செல்லும் ரோடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.தற்போது வரை பராமரிப்பு பணி செய்யப்படாததால் ரோடு சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விபத்து ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.அவசர காலங்களில் கூட ஆம்புலன்ஸ் வேகமாக செல்ல முடியாததால் உயிர்சேதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் ஆட்டோவில் செல்லும் போதும் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இதையடுத்து சேதமடைந்த ரோட்டை சீரமைக்க கோரி கே.நெடுங்குளம், திருசிலுவையாபுரம், உடைகுளம், நல்லாங்குளம், புதுப்பட்டி உட்பட அதனை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கமுதி -கீழ்குடி ரோட்டில் சீமைகருவேல மரங்களை போட்டு சாலைமறியல் ஈடுபட்டனர்.அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பி.டி.ஓ., கோட்டைராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. நடத்தை விதிகள் முடிந்தவுடன் சேதமடைந்த ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ