உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அருகே தலைக்கால் கிராமத்தில் வீணாகிய குறுங்காடு

பரமக்குடி அருகே தலைக்கால் கிராமத்தில் வீணாகிய குறுங்காடு

பரமக்குடி: -பரமக்குடி அருகே தலைக்கால் கிராமத்தில் புதிய குறுங்காட்டிற்கு வேலி அமைத்த நிலையில் பராமரிக்கப்படாமல் பல லட்சம் ரூபாய் வீணாகியது.ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவை மற்றும் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பரமக்குடி அருகே தென் பொதுவக்குடி ஊராட்சி தலைக்கால் கிராமத்தில் குறுங்காடு அமைக்கப்பட்டது. இந்த குறுங்காடு முதுகுளத்துார் ரோட்டோரம் அமைந்துள்ளது. இதன் பாதுகாப்பு கருதி 2021--22ஆம் ஆண்டில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 696 ரூபாய் மதிப்பில் குறுங்காட்டிற்கு வேலி அமைக்கப்பட்டது.தற்போது இந்த குறுங்காட்டில் எந்த மரமும் வளராத நிலையில் வேலி மற்றும் பொருட்கள் வீணாகி உள்ளது. தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் குறுங்காட்டை மீண்டும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இத்திட்டத்தின் பயன் தலைக்கால் கிராமத்திற்கு கிடைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி