உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பட்டா மாறுதலுக்கு சிரமப்படும் மக்கள் ஆன்லைன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுமா

பட்டா மாறுதலுக்கு சிரமப்படும் மக்கள் ஆன்லைன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுமா

சாயல்குடி: -பட்டா மாறுதலுக்கு உரிய நடைமுறைகளில் இ--சேவை மையம் மூலம் நேரடி பட்டா மாறுதல் உட்பிரிவு பட்டா மாறுதல் நடப்பதால் ஆன்லைன் குளறுபடி அதிகமாக நடக்கிறது.தமிழக அரசு கொண்டு வந்த இ--சேவை மையம் சேவைப்படி நிலங்களுக்கு நேரடி பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. இவற்றில் நீதிமன்றத்தில் வழக்கு சொத்துக்களும், சொத்திற்கு சம்பந்தப்படாதவர்கள் போலியான ஆவணங்களை கொண்டு வரும் பட்டாவை வைத்து நிலங்களை மூன்றாம் நபருக்கு மோசடியாக விற்பனை செய்யும் போக்கு தொடர்கிறது. இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சாயல்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவப்பிரகாசம் கூறியதாவது:ஆன்லைன் மற்றும் இ--சேவை, அலைபேசி செயலி மூலம் விண்ணப்பிக்கக்கூடிய பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதலில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகிறது. இந்நிலையில் தாலுகா அலுவலகங்களில் உள்ள நில அளவைப் பிரிவு அலுவலர்களால் சம்பந்தப்பட்ட பட்டா மாறுதல் நிலங்களின் உண்மைத் தன்மை அறியாமல் பட்டா மாறுதல் செய்யும் போது நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குச் சொத்துக்களுக்கும் மற்றும் உண்மையான அனுபவத்திலும் உரிமையிலும் உள்ள பயனாளிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்து கிறது. இதன் மூலம் நீதிமன்றம் சென்று பட்டா மாறுதல் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது. இது தொடர்பாக பாதிப்பிற்குள்ளானவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா பிரிவு நில அளவை அலுவலர்கள் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களின் உண்மைத்தன்மை அறிய வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்து பட்டா வழங் வேண்டும்.தாலுகா மற்றும் பத்திரபதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் தலையீடு அதிகளவு நிகழ்கிறது. உரிய முறையில் விசாரணை செய்யப்படாததால் பிரச்னைக்கு வழி ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை