உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புண்ணிய ஸ்தலங்கள் பகுதியில் தாகம் தீர்க்க குடிநீர் வசதி தேவை கண்டுகொள்ளுமா ஊராட்சி நிர்வாகம்

புண்ணிய ஸ்தலங்கள் பகுதியில் தாகம் தீர்க்க குடிநீர் வசதி தேவை கண்டுகொள்ளுமா ஊராட்சி நிர்வாகம்

திருப்புல்லாணி : ராமநாதபுரம் மாவட்டத்தில் புண்ணிய ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் அதிகளவு உள்ளன. குறிப்பாக திருப்புல்லாணி, சேதுக்கரை, உத்தரகோசமங்கை, ஏர்வாடி தர்கா உள்ளிட்ட ஊராட்சிகளில் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் வசதிக்காக குறிப்பிட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.வைணவ திவ்ய தேசங்கள் 108 ல் 44 வதாக திகழும் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் அருகே குடிநீர் தொட்டி வைக்கவும், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் அருகே குடிநீர் தொட்டி, சேதுக்கரை சேதுபந்தன ஜெய வீர ஆஞ்சநேயர் கோயில் அருகே குடிநீர் தொட்டி, ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா அருகே குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் அவசியம் தேவைப்படுகிறது.இங்கு பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை பக்தர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். தேவைப்படும் இடங்களில் ஆர்.ஓ., பிளான்ட் அமைக்காமல் இஷ்டத்திற்கு நோக்கம் போல் யூனியன் அதிகாரிகள் அமைத்துள்ளனர்.எனவே புண்ணிய ஸ்தலங்கள் மற்றும் கோயில் அமைந்துள்ள இடங்களில் மக்கள் நலனுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்.ஓ.,பிளான்ட் அமைத்திடவும், ஏற்கனவே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்ட இடத்தை முறையாக பராமரித்து அவற்றில் தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்