உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடுத்தடுத்த ஒரு மணி நேரத்தில் துாக்கிட்டு இருவர் தற்கொலை

அடுத்தடுத்த ஒரு மணி நேரத்தில் துாக்கிட்டு இருவர் தற்கொலை

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வங்கி நகை மதிப்பீட்டாளரான வாலிபரும், தனியார் பள்ளி ஆசிரியையான இளம் பெண்ணும் அடுத்தடுத்த ஒரு மணி நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தனர். பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் மைக்கேல் ராஜ் 25. இவர் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். இவர் நேற்று மதியம் 12:15 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இதே போல் கோகுலர் தெருவைச் சேர்ந்த கேசவன் மகள் அபிதா 23. இவர் பரமக்குடி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்தார். இவரும் நேற்று மதியம் 1:15 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்தார். அடுத்தடுத்து ஒரு மணி நேரத்தில் பரமக்குடியில் வாலிபர், இளம் பெண் தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் வயிற்று வலியால் தற்கொலை என வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை