தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் வசிக்கும் அவலம்
முதுகுளத்துார், : முதுகுளத்துார் பேரூராட்சி 2-வது வார்டு காந்தி நகர் வடக்கு உள்ளிட்ட பகுதியில் தெருவிளக்கு வசதியில்லாமல் மக்கள் இருளில் தவிக்கின்றனர்.முதுகுளத்துார் பேரூராட்சி 2-வது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காந்தி நகர் வடக்கு உள்ளிட்ட ஒருசில பகுதியில்கடந்த சில மாதங்களாக தெருவிளக்கு வசதியில்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். 2-வது வார்டு மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மக்கள் கூறியதாவது: 2-வது வார்டில் மின் விளக்கு இல்லாமல் சிரமப்படுகிறோம். பேரூராட்சி சார்பில் தெரு விளக்கு அமைப்பதற்காக மின்வாரிய அலுவலகத்தில் பணம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களை கடந்தும் புதிய மின் இணைப்பு கொடுக்காமல் மின்வாரியத்தினர் அலட்சியம் காட்டுகின்றனர்.இதனால் இரவு நேரத்தில் தெருக்கள் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. வெளியில் வருவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் புதிதாக தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.