உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்தி வழிபாடு

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் முருகன் கோயில்களில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நடந்தது.பரமக்குடி சக்தி குமரன் செந்தில் ஆண்டவர் கோயிலில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு நேற்று முன்தினம் மாலை சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். பரமக்குடி ஈஸ்வரன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் தட்சிணாமூர்த்தி வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை