உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கடலில் விடப்பட்ட 10.50 கோடி இறால் குஞ்சுகள்

ராமேஸ்வரம் கடலில் விடப்பட்ட 10.50 கோடி இறால் குஞ்சுகள்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் மத்திய மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் 10.50 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகளை விட்டுள்ளனர்.ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் பச்சை வரி இறால் குஞ்சுகள் உற்பத்தி செய்து அதனை மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடலில் விடுகின்றனர்.அதன்படி நேற்று முன்தினம் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத் தலைமையில் திட்ட தலைவர் தமிழ்மணி, விஞ்ஞானி ஜான்சன் முன்னிலையில் 21 லட்சம் இறால் குஞ்சுகளை மன்னார் வளைகுடா கடலில் விட்டனர்.இந்த இறால் குஞ்சுகள் 10 முதல் 15 கிராம் எடை உள்ளது. இவை 3 முதல் 4 மாதங்களில் 100 முதல் 150 கிராம் வரை வளர்ந்து விடும். இவை வலையில் சிக்கியதும் மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். இத்திட்டத்தில் 2022 பிப்., முதல் தற்போது வரை 10 கோடியே 50 லட்சத்து 64 ஆயிரம் இறால் குஞ்சுகளை கடலில் விட்டு மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி