உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புகையிலை பொருட்கள் விற்ற  கடைகளுக்கு 15 நாள் பூட்டு 

புகையிலை பொருட்கள் விற்ற  கடைகளுக்கு 15 நாள் பூட்டு 

ராமநாதபுரம்: நயினார்கோவில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம்அபராதம் விதித்து 15 நாள்களுக்கு கடையை பூட்டி மாவட்ட உணவுபாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துச்சாமி, சத்தீஸ் வரன், வெண்ணிலா குழுவினர்நயினார்கோவில், கொழுவூர், பாண்டியூர், கொடிக்களம், அரியங்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள கடைகளில் ஆய்வுசெய்தனர். அப்போது மூன்று கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிந்து 5 கிலோ எடையுள்ளதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 15நாள்களுக்கு விற்பனை செய்ய தடை விதித்து கடை மூடப் பட்டது. இதேபோல் உணவுபாதுகாப்பு உரிமம் இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு விரைவில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறவில்லை என்றால் வழக்குதொடரப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி