உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் வந்த ரயிலில்  15 கிலோ குட்கா பறிமுதல்

ராமேஸ்வரம் வந்த ரயிலில்  15 கிலோ குட்கா பறிமுதல்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் வந்த பெரோஸ்பூர் விரைவு ரயிலில் இருந்த 15 கிலோ குட்காவை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். பெரோஸ்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் வாரந்திர ரயில் திங்கள் கிழமை மாலை 6:30 மணிக்கு ராமநாதபுரம் வந்தடைகிறது. நேற்று இந்த ரயில் 12:00 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 8:30 மணிக்கு ராமநாதபுரம் வந்தது. ரயில்வே எஸ்.ஐ., இளங்கோவன் தலைமையில் போலீசார் ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு பெட்டியான பி 2 பெட்டியில் மூடை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதனை சோதனையிட்டதில் 15 கிலோ குட்கா இருந்தது. இதனை கைப்பற்றி குட்கா மூடையை கடத்தி வந்தவர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.2 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை