மேலும் செய்திகள்
ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு 52 படகுகள்
24-Sep-2024
ராமநாதபுரம்:எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசு இதுவரை 191 படகுகளை பறிமுதல் செய்துள்ளதால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.இதுவரை 15 நாட்டுப்படகுகள், 176 விசைப்படகுகள் உட்பட 191 படகுகள் இலங்கை அரசிடம் உள்ளன. இதில் 14 படகுகள் மீதான வழக்குகள் நிறைவடைந்து இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட படகுகளை எடுத்து வர மத்திய, மாநில அரசுகள் உரிய அனுமதி அளிக்காததால் தமிழகத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர்.மீன் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2018 முதல் 2023 வரை 90 விசைப்படகுகள், 15 நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு தரப்பில் இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டால் விசைப்படகுக்கு ரூ.6 லட்சம், நாட்டுப்படகிற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதில் 69 விசைப்படகுகள், 9 நாட்டுப்படகுகளுக்கான நிவாரணத் தொகை வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனர்.இலங்கை அரசு தொடர்ந்து படகுகளை பறிமுதல் செய்வதால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து வருகின்றனர்.மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு படகுகளை விடுவிக்க இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
24-Sep-2024