உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சிறுமியை கர்ப்பமாக்கிய  வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

 சிறுமியை கர்ப்பமாக்கிய  வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

ராமநாதபுரம்: முதுகுளத்துார் அருகே 14 வயது சிறுமியை கர்ப்ப மாக்கிய வாலிபருக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாத புரம் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுகுளத்துார் அருகே கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் மகாலிங்கம் 30. இவரது தாய் 2020 மே மாதம் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவரின் உறவினரான 14 வயது சிறுமி மகாலிங்கத்தின் தாய்க்கு தண்ணீர் எடுத்து கொடுக்க வந்துள்ளார். அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியை பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்ப மானார். இதையறிந்த பெற்றோர் 2020 செப்.,ல் பரமக்குடி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் மகாலிங்கத்தை போக்சோ சட் டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கவிதா நேற்று தீர்ப்பளித்தார். போக்சோ சட்டத்தில் மகாலிங்கத்திற்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தர விட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜ ரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை