உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு விழாவுக்கு ரூ.2000 படகு கட்டணம்

கச்சத்தீவு விழாவுக்கு ரூ.2000 படகு கட்டணம்

ராமேஸ்வரம்,:-கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவுக்கு நபர் ஒருவருக்கு படகு பயண கட்டணம் ரூ.2000 செலுத்த வேண்டும் என ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு தெரிவித்தார்.ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ.,ல் பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா பிப்.,23, 24ல் நடக்கிறது. முதல் நாளான பிப்.,23ல் தமிழக பாதிரியார்கள் தலைமையில் சிலுவைப்பாதை, திருவிழா திருப்பலி பூஜை நடத்துவார்கள். மறுநாள் (பிப்.,24) இலங்கை பாதிரியார்கள் திருவிழா திருப்பலி பூஜை நடத்துவார்கள். இவ்விழாவில் பங்கேற்க இலங்கை யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆயர் அலுவலக முதன்மை பாதிரியார் ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகுக்கு கடிதம் அனுப்பினார்.ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கூறியதாவது:பிப்.,23 அதிகாலை 5:00 மணி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து 70 முதல் 75 படகுகளில் 3000 பக்தர்கள் கச்சத்தீவு விழாவில் பங்கேற்கின்றனர். ஒரு நபருக்கு படகு கட்டணம் ரூ.2000 செலுத்த வேண்டும். பாதிரியார், அருட்சகோதரிகள் 150 பேர் செல்வார்கள். பக்தர்கள் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள்களை எடுத்து செல்லக்கூடாது. வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் அந்தந்தப் பகுதி போலீசில் தடையில்லா சான்று பெற வேண்டும். விழா விண்ணப்ப மனுவை பிப்.,4க்குள் தரவேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி