உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரில் கடத்திய 2659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்

காரில் கடத்திய 2659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது காரில் கடத்தப்பட்ட 2659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிச்சென்ற டிரைவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் சிவில் சப்ளை பறக்கும் படை தனி தாசில்தார் தமீம்ராஜா, வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம் குழுவினர் நேற்று காலை கேணிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்ட போது டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காருக்குள் 45 மூடைகளில் இருந்த 2659 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். தப்பியோடிய டிரைவர் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை