பெயின்டருக்கு கத்திக் குத்து 3 பேர் கைது
தொண்டி: தொண்டி காந்திநகரை சேர்ந்தவர் தாஸ் 43. பெயின்ட் கடை வைத்துள்ளார். நேற்று காலை புடனவயல் கிராமத்தில் நடந்த வீட்டு விழாவில் கலந்து கொண்டு டூவீலரில் தொண்டியை நோக்கி சென்றார். முன்விரோதம் காரணமாக விளக்கனேந்தல் செந்தில்கனி மாதவன் 35, கண்மாய்க்கரை குடியிருப்பு கவுதம் 34, பண்ணவயல் ரெத்தினம் 40, ஆகியோர் புதுக்குடி விலக்கில் வழிமறித்து கத்தியால் குத்தி, கம்பால் தாக்கினர். இதில் தாஸ் முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தாஸ் புகாரில் தொண்டி எஸ்.ஐ. சுந்தரமூர்த்தி 3 பேரையும் கைது செய்தார்.