உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எட்டு மாதங்களில் 306 கிலோ கஞ்சா பறிமுதல்: கைது 190

எட்டு மாதங்களில் 306 கிலோ கஞ்சா பறிமுதல்: கைது 190

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 190 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 306 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதை பழக்கத்தை கட்டுப்படுத்த ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது, கடத்துவதை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 241 பேரிடமிருந்து 3379 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 8 மாதத்தில் 109 கஞ்சா வழக்குகளில் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் 78 கிலோ, துறைமுகம் ஸ்டேஷனில் 50 கிலோ, உச்சிப்புளி ஸ்டேஷனில் 32 கிலோ, மண்டபம் ஸ்டேஷனில் 25 கிலோ என 306 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த மே மாதம் 152 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 746 கிலோ பழைய கஞ்சா அழிக்கப்பட்டது. மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட 911 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிமிருந்து 3300 லிட்டர் மதுபானங்கள், 38 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மாணவர்களிடையே போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 286 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி