வாசகர்கள் கருத்துகள் ( 1 )
5 பேரையும் பார்டரில் கொண்டு போய் விட்டு விட்டால் எல்லாம் சரியாகிவிடும்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தேவர்குறிச்சி அருகே மணல் திருடிய 5 பேரை இளஞ்செம்பூர் போலீசார் கைது செய்தனர்.முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட தேவர்குறிச்சி அருகே தனியார் பட்டா நிலத்தில் சிலர் மணல் திருடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., முனியாண்டி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவர்குறிச்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட பெருங்கருணை கதிரேசன் 42, ஆதனகுறிச்சி முருகன் 48, கிழவனேரி அஜித் 25, திவாகர் 19, மனக்குளம் கோவிந்தராஜ் 19, ஆகிய 5 பேரை கைது செய்து மணல் திருட்டிற்கு பயன்படுத்திய மணல் அள்ளும் இயந்திரம், 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
5 பேரையும் பார்டரில் கொண்டு போய் விட்டு விட்டால் எல்லாம் சரியாகிவிடும்