உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ஆடுவதை கூடம் முடங்கியதால் ரூ.50 லட்சம் வீண்

ராமேஸ்வரத்தில் ஆடுவதை கூடம் முடங்கியதால் ரூ.50 லட்சம் வீண்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பயன்பாட்டிற்கு வராமல் ஆடுவதைக் கூடம் முடங்கியதால் ரூ.50 லட்சம் வீணாகியது.ராமேஸ்வரம் நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு ஆடுகளை திறந்த வெளியில் வெட்டி கழிவுகளை வீசுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவியது. இதனை தடுக்க மார்க்கெட் வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 லட்சத்தில் ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டத்தில் ஒரு நாள் கூட ஆடுகளை வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் முடங்கி கிடக்கிறது. இதனால் கட்டடத்தில் உள்ள குழாய்கள், கதவுகள் சேதமடைந்தும் கட்டட சுவரில் விரிசல் ஏற்பட்டு பலமிழந்துள்ளது. தற்போது மார்க்கெட் வளாகத்தில் ஆட்டிறைச்சி விற்பதில்லை. நகராட்சி அதிகாரிகள் அவசர கோலத்தில் ஆடுவதைக் கூடம் அமைத்ததால் முடங்கிய நிலையில் மக்கள் வரிப் பணம் ரூ. 50 லட்சம் வீணாகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ