உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீஸ் தேர்வில் 714 பேர் ஆப்சென்ட் 

போலீஸ் தேர்வில் 714 பேர் ஆப்சென்ட் 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்தேர்வில் 714 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தமிழக காவல்துறையில் 3655 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லுாரி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, கே.ஜே.இ.எம்., மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது. இதில் 5178 ஆண்கள், 1344 பெண்கள் என 6522 பேர் தேர்வு எழுத அனுமதி சீட்டு வழங்கப்பட்ட நிலையில் 1178 பெண்கள் உட்பட 5808 பேர் (89.1 சதவீதம்) தேர்வு எழுதினர். 714 பேர் தேர்வு எழுதவில்லை. ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை எஸ்.பி., சந்தீஷ் நேரில் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை