உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா நிறைவு 11 நாட்களில் 76,000 மாணவர்கள் வருகை

ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா நிறைவு 11 நாட்களில் 76,000 மாணவர்கள் வருகை

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 6 வது புத்தத்திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. 11 நாட்களில் பள்ளி, கல்லுாரி என 76ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைபள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்.2 முதல் 12 வரை புத்தகத் திருவிழா நடந்தது.நேற்றிரவு நிறைவு விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார். 110 அரங்குகளில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது. பாரம்பரிய உணவுபொருட்கள், மூலிகை மருத்துவம், வரலாறு, ஓவியக் கண்காட்சி, கோளரங்கம், மாணவர்கள் பயிற்சி பட்டறை அமைக்கப்பட்டது. தினமும் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடந்தது. 11 நாட்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மட்டும் 76 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சப்கலெக்டர் அபிலாஷா கவுர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, ராமநாதபுரம் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் தலைவர் சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் அப்துல்லா பங்கேற்றனர். செய்தி மக்கள் தொடர் அலுவலர் பாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை