மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
11 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
11 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
11 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
11 hour(s) ago
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் 7.700 கிலோ தங்க கட்டியை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடிய கடத்தல்காரரை தேடி வருகின்றனர்.தங்கச்சிமடம் தர்கா பஸ் ஸ்டாப்பில் டூவீலரில் சந்தேகத்துக்குரிய இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் மடக்கி பிடித்த போது, தப்பி ஓடிவிட்டார். பின் டூவீலரில் பதுக்கி வைத்திருந்த 7.700 கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4.80 கோடி. இந்த தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தி வந்ததாகவும், மேலும் தங்க கட்டிகளை தங்கச்சிமடத்தில் பதுக்கி வைத்து உள்ளாரா எனவும் சுங்கத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். தப்பி ஓடிய கடத்தல்காரரை தேடி வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago