உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடி அருகே வெறிநாய்கள் கடித்து 8 செம்மறி ஆடுகள் பலி

கடலாடி அருகே வெறிநாய்கள் கடித்து 8 செம்மறி ஆடுகள் பலி

கடலாடி : கடலாடி அருகே மீனங்குடி ஊராட்சி சாத்தாங்குடி வெள்ளாங்குளம் கிராமத்தில் ஆட்டுக்கிடையில் புகுந்த வெறிநாய்கள் கடித்ததில் 8 செம்மறி ஆடுகள் பலியாகின. சாத்தாங்குடி வெள்ளாங் குளம் கிராமத்தைச் சேர்ந்த வர் விவசாயி சரவணன். இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை 7:00 மணிக்கு ஆட்டுக்கிடையில் புகுந்த பத்திற்கும் மேற்பட்ட வெறி நாய்கள் 6 செம்மறி ஆடுகளின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் கடித்து குதறியதில் சம்பவ இடத்தில் ஆடுகள் பலியாகின. தப்பி ஓடிய வெறிநாய்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேதுநாதன் என்பவருக்கு சொந்தமான இரண்டு செம்மறி ஆடுகளையும் கடித்துக் குதறி கொன்றன. விவசாயிகள் கூறியதாவது: கிராமத்தில் பத்திற்கும் மேற்பட்ட வெறிநாய்கள் மொத்தமாக புகுந்து வீடுகளில் வளர்க்கக்கூடிய கால்நடைகளை கடித்து காயப்படுத்தி கொல் கின்றன. இதனால் 75 ஆயிரம் மதிப்பிலான செம்மறி ஆடுகள் இறந்து உள்ளன. எனவே கடலாடி வருவாய்த்துறையினர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். பாதிப்பை ஏற்படுத்தும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை