ராமநாதபுரத்தில் மறியல் செய்த சி.ஐ.டி.யு.,வினர் 87 பேர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு.,வினர் 87 பேர் கைது செய்யப்பட்டனர். சாம்சங் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., வினர் அரண்மனைப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் மாவட்டத்தலைவர் சந்தானம், செயலாளர் சிவாஜி, மாவட்ட நிர்வாகிகள் மலைராஜன், பாஸ்கரன், அய்யாதுரை உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 87 பேரை போலீசார் கைது செய்து தனியார் மகாலில் அடைத்தனர். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.